Saturday, March 10, 2018

Remote control (தொலைவியக்கி) வேலை செய்கிறதா? இல்லையா? கண்டுபிடிக்க எளிய வழி

நமது வீடுகளில் தொலைக்காட்சி, டிவிடி ப்ளேயர் போன்ற இன்னும் பிற சாதனங்களில் தொலைவியக்கி - REMOTE பயன்படுத்துகிறோம். இது சில சமயங்களில் வேலை செய்கிறதா? இல்லையா? என்பது தெரிவதில்லை.

தொலைவியக்கி மூலம் கருவிகளை இயக்கும் பொழுது அந்த செயல் நடைபெறவில்லை என்றால் இரண்டு காரணங்கள் இருக்கலாம்.



1. கருவியில் உள்ள தொலைவியக்கியின் சமிக்ஞை (signals)களை பெறக்கூடிய unit இல் சிக்கல்...

அல்லது

2. தொலைவியக்கியில் சிக்கல்.( அதாவது தொலைவியக்கி சரியாக வேலை செய்யாமல் இருப்பது/ அல்லது தொலைவியக்கியின் பேட்டரியில் போதிய மின்சாரம்- சார்ஜ் இல்லாமல் இருப்பது)

கருவியில் உள்ள unit இல் பிரச்சனை என்றால் அதை சேவை மையத்தில் - service centre இல் கொடுத்து சரி செய்யலாம். Remote இல் பிரச்சனை என்றால், முக்கியமாக பேட்டரி சார்ஜ் இல்லை என்றால் அதை நாமே சரி செய்து விடலாம்.

ஆனால் முதலில் ரிமோட்டில் தான் பிரச்சனை என்பதை எப்படி நாமே கண்டு பிடிப்பது?

கடைகளில் புதிய remote வாங்கும் பொழுது அதை check செய்ய ரிமோட்டில் பேட்டரி போட்டு ஒரு கருவிக்கு நேராக காண்பித்தது ஒவ்வொரு பொத்தானாக -button ஆக அழுத்தும் போது அந்த கருவி "பீப்" ஒலி எழுப்பும். அதன் மூலம் அந்த ரிமோட் மற்றும் அதிலுள்ள பொத்தான்கள் நன்றாக வேலை செய்கிறது என்பதை அறியலாம். வீட்டில் எப்படி சோதனை செய்வது?

மிகவும் எளிது. அதற்காக நீங்கள் அந்த பீப் ஒலி எழுப்பும் கருவியை எல்லாம் வாங்கத் தேவை இல்லை. பின்வரும் வழிகளை பின்பற்றுங்கள்.

தேவையானது கேமரா வசதி உள்ள ஏதாவது ஒரு மொபைல் போன். அவ்வளவு தான்..!

படி1: முதலில் உங்கள் மொபைலில் கேமராவை on செய்து கொள்ளுங்கள்...

படி2: பின்னர் உங்கள் ரிமோட்டில் உள்ள சிக்னல் அனுப்பும் LED யை கேமராவில் காண்பியுங்கள்.

படி3: இப்போது ரிமோட்டில் உள்ள ஒவ்வொரு பட்டன் ஆக அழுத்துங்கள்.

படி4: நீங்கள் அழுத்தும் ஒவ்வொரு பட்டன்க்கும் மொபைலில் உள்ள கேமரா மூலம் பார்க்கும் பொழுது ஒரு voilet நிற ஒளி தெரியும். அப்படி தெரிந்தால் ரிமோட் நன்றாக வேலை செய்கிறது என்று பொருள்.

படி5: சில பொத்தானை அழுத்தும்போது ஒளி வரவில்லை என்றால் அந்த பொத்தான் மட்டும் வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.

படி6: எந்த பட்டன்னும் அழுத்தும் பொழுது ஒளி வரவில்லை என்றால் பேட்டரியை மாற்றி பார்க்கலாம். அப்படியும் ஒளி வரவில்லை என்றால் ரிமோட் அவுட் என்று அர்த்தம். வேறு ரிமோட் வாங்க வேண்டும்.

பி.கு.: ரிமோட்டின் LED இல் இருந்து வரும் ஒளியை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. மொபைல் கேமரா மூலமே பார்க்க முடியும்.

இந்த பதிவு பிடித்தால் பகிருங்கள்...

No comments:

Post a Comment