Sunday, March 11, 2018

ஏர்செல் போர்ட் கோட் கிடைக்க எளிய வழி

அன்பிற்கினிய ஏர்செல் உபயோகிப்பாளர்களே....!



  ஏர்செல் நிறுவனம் நிதிச்சுமை காரணமாக தன்னுடைய சேவையை நிறுத்தியுள்ளது. தற்போது அதற்கான போர்ட் கோட் வாங்க முடியாத வகையில் டவர் சிக்னல்கள் கிடைப்பதில் பிரச்சனை வந்துவிட்டது.

ஐயோ.. அப்படியானால் என்னுடைய மொபைல் எண்ணை மாற்றாமல் வேறு நிறுவனத்திற்கு மாற முடியாமல் போய் விடுமோ என்று அச்சப்பட தேவையில்லை.

கீழ்க்காணும் லின்க்கில் சென்று போர்ட் கோட் வாங்கலாம்.

படி 1: இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
https://ekyc.aircel.com:444/ekyc/genUPC.html


படி 2: CUSTOMER MOBILE NUMBER என்னும் இடத்தில் உங்கள் ஏர்செல் எண்ணை பதிவு செய்யவும்.

படி 3: சிம் கார்டு மேல் உள்ள 19 அல்லது 20 இலக்க எண்களில் கடைசி 5 இலக்கங்களை SIM NUMBER என்னும் இடத்தில் பதிவு செய்யவும்.


படி 4: இப்போது GENERATE UPC என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது உங்களுக்கு UPC கிடைத்து விடும்.

நீங்கள் மாற விரும்பும் நிறுவனத்தில் இந்த கோட் கொடுத்து உங்கள் ஏர்செல் எண்ணை வேறு நிறுவன நெட்வொர்க்குக்கு  மாற்றிகொள்ளுங்கள்..!

தகவலை பகிருங்கள்.. மற்ற ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கும் உதவுங்கள்...!

Saturday, March 10, 2018

Remote control (தொலைவியக்கி) வேலை செய்கிறதா? இல்லையா? கண்டுபிடிக்க எளிய வழி

நமது வீடுகளில் தொலைக்காட்சி, டிவிடி ப்ளேயர் போன்ற இன்னும் பிற சாதனங்களில் தொலைவியக்கி - REMOTE பயன்படுத்துகிறோம். இது சில சமயங்களில் வேலை செய்கிறதா? இல்லையா? என்பது தெரிவதில்லை.

தொலைவியக்கி மூலம் கருவிகளை இயக்கும் பொழுது அந்த செயல் நடைபெறவில்லை என்றால் இரண்டு காரணங்கள் இருக்கலாம்.



1. கருவியில் உள்ள தொலைவியக்கியின் சமிக்ஞை (signals)களை பெறக்கூடிய unit இல் சிக்கல்...

அல்லது

2. தொலைவியக்கியில் சிக்கல்.( அதாவது தொலைவியக்கி சரியாக வேலை செய்யாமல் இருப்பது/ அல்லது தொலைவியக்கியின் பேட்டரியில் போதிய மின்சாரம்- சார்ஜ் இல்லாமல் இருப்பது)

கருவியில் உள்ள unit இல் பிரச்சனை என்றால் அதை சேவை மையத்தில் - service centre இல் கொடுத்து சரி செய்யலாம். Remote இல் பிரச்சனை என்றால், முக்கியமாக பேட்டரி சார்ஜ் இல்லை என்றால் அதை நாமே சரி செய்து விடலாம்.

ஆனால் முதலில் ரிமோட்டில் தான் பிரச்சனை என்பதை எப்படி நாமே கண்டு பிடிப்பது?

கடைகளில் புதிய remote வாங்கும் பொழுது அதை check செய்ய ரிமோட்டில் பேட்டரி போட்டு ஒரு கருவிக்கு நேராக காண்பித்தது ஒவ்வொரு பொத்தானாக -button ஆக அழுத்தும் போது அந்த கருவி "பீப்" ஒலி எழுப்பும். அதன் மூலம் அந்த ரிமோட் மற்றும் அதிலுள்ள பொத்தான்கள் நன்றாக வேலை செய்கிறது என்பதை அறியலாம். வீட்டில் எப்படி சோதனை செய்வது?

மிகவும் எளிது. அதற்காக நீங்கள் அந்த பீப் ஒலி எழுப்பும் கருவியை எல்லாம் வாங்கத் தேவை இல்லை. பின்வரும் வழிகளை பின்பற்றுங்கள்.

தேவையானது கேமரா வசதி உள்ள ஏதாவது ஒரு மொபைல் போன். அவ்வளவு தான்..!

படி1: முதலில் உங்கள் மொபைலில் கேமராவை on செய்து கொள்ளுங்கள்...

படி2: பின்னர் உங்கள் ரிமோட்டில் உள்ள சிக்னல் அனுப்பும் LED யை கேமராவில் காண்பியுங்கள்.

படி3: இப்போது ரிமோட்டில் உள்ள ஒவ்வொரு பட்டன் ஆக அழுத்துங்கள்.

படி4: நீங்கள் அழுத்தும் ஒவ்வொரு பட்டன்க்கும் மொபைலில் உள்ள கேமரா மூலம் பார்க்கும் பொழுது ஒரு voilet நிற ஒளி தெரியும். அப்படி தெரிந்தால் ரிமோட் நன்றாக வேலை செய்கிறது என்று பொருள்.

படி5: சில பொத்தானை அழுத்தும்போது ஒளி வரவில்லை என்றால் அந்த பொத்தான் மட்டும் வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.

படி6: எந்த பட்டன்னும் அழுத்தும் பொழுது ஒளி வரவில்லை என்றால் பேட்டரியை மாற்றி பார்க்கலாம். அப்படியும் ஒளி வரவில்லை என்றால் ரிமோட் அவுட் என்று அர்த்தம். வேறு ரிமோட் வாங்க வேண்டும்.

பி.கு.: ரிமோட்டின் LED இல் இருந்து வரும் ஒளியை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. மொபைல் கேமரா மூலமே பார்க்க முடியும்.

இந்த பதிவு பிடித்தால் பகிருங்கள்...

Thursday, March 8, 2018

தமிழில் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்

அன்பின் தமிழக பள்ளி ஆசிரியர்களே...!

தூய தமிழில் நமது பள்ளி மாணாக்கரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி வழிபாட்டுக் கூட்டத்தில் வாழ்த்தி இசைக்க அருமையான

பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்..! mp3 வடிவில்...

தரவிறக்க - டவுன்லோட் செய்ய ... 
சொடுக்கவும்..
⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇
தமிழ் பிறந்தநாள் வாழ்த்துப்பாடல்.mp3

நன்றி : படைப்பாளர்கள்.

கொடிப்பாடல் எம்பி3

பள்ளி மாணாக்கர்  பாடுவதற்கு ஏற்ற வகையில் எடிட் செய்யப்பட்ட கொடிப்பாடல் ....

mp3 வடிவில் ...

தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்யவும்...
⥥⥥⥥⥥⥥⥥⥥⥥⥥⥥⥥⥥⥥⥥⥥⥥⥥⥥
கொடிப்பாடல்.mp3

நன்றி : படைப்பாளர்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்து எம்பி3 பாடல்


அன்பின் ஆசிரிய பெருமக்களே...!

பள்ளிகளில் காலை வழிபாட்டு கூட்டங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் இசைக்க MP3 வடிவிலான தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்...

தரவிறக்கம் (DOWNLOAD) செய்ய பின்வரும் இணைப்பை சொடுக்கவும்...
       ⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩
தமிழ்த்தாய் வாழ்த்து.mp3

நன்றி : படைப்பாளர்கள்.