Wednesday, July 11, 2018

யார் யார் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்???

யார் யார்  வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்???

1️⃣1️⃣0️⃣7️⃣2️⃣0️⃣1️⃣8️⃣
நமது நண்பர்கள்
பலர் IT return தொடர்பாக பல சந்தேகங்கள் கேட்டிருந்தனர்.
அவைகள் குறித்து நமது நண்பர் கோவையை சேர்ந்த ஆடிட்டர் திரு.சத்தியப்பிரகாஷ் அவர்களிடம் கேட்கப்பட்டது அவர்  $®π தெரிவித்தவை:

💠மாதச்சம்பளம் பெறும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் அவர்களின் சம்பளம் பெற்று வழங்கும் அதிகாரிகள் TAN எண் பெற்றிருப்பவராக (TAN holder) இருந்து அவர் வழியாக ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்திற்கு E-TDS (24-Q) தாக்கல் செய்யும்பட்சத்தில் அவரிடம் சம்பளம் பெறும் ஊழியர்களில் வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரின் கணக்கிலும் 26as படிவத்தில் onlineல் பதிவாகும். அந்த ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தனிநபர் வருமான வரி தாக்கல் (IT return E-FILING) செய்ய வேண்டும்.


💠ஆண்டு வருமானம் எவ்வளவு இருந்தாலும் வருமான வரி செலுத்துபவராக இருந்தால்    $®π கட்டாய வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். தற்போது வருமான வரி வரம்புக்குள் வராதவராக (Nil Tax) இருந்தாலும் ஆண்டு வருமானம் 2.5லட்சத்தை தாண்டினால் கட்டாயம் வருமான வரி தாக்கல் (Nil Tax return E-filing) செய்ய வேண்டும்.


💠சம்பளம் வழங்கும் அலுவலர் E-TDS(24-Q) தாக்கல் செய்து அவருக்கு கீழ் பணிபுரியும்  ஊழியர்கள் IT Return தாக்கல் செய்யாதபட்சதில் கட்டாயம் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புதல் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் இந்த ஆண்டு முதல் கடுமையாக மேற்கொள்ளும்.


💠அடுத்ததாக ஒரு வதந்தி,
பலர் 5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் மட்டுமே IT return தாக்கல் செய்ய வேண்டும் என்கிறார்கள் அது குறித்தும் கேட்கப்பட்டது
  5 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம்  உள்ளவர்கள் மட்டுமே IT return தாக்கல் ONLINE ல் தான் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும்.
5லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் உடையவர்கள் online லோ அல்லது வருமான வரி அலுவலகத்தில் offline நேரிலோ தாக்கல் செய்யலாம் என்பதை சிலர் தவறாக புரிந்துகொண்டு
5லட்சத்து குறைவாக ஆண்டு வருமானம் உள்ளவர்கள் தாக்கல் செய்ய தேவையில்லை என்று நினைக்கின்றனர்.


💠மேலும் ஒருசில ஊழியர்கள் சம்பளம் தவிர FD, Shares, Mutual Fund உள்ளிட்ட பிற முதலீடுகள்  $®π  ஏதேனு செய்திருப்பின் அதன் மூலம் பெற்படும் வட்டி, டிவிடென்ட் போன்ற ஆதாயத் தொகையும் 26as படிவத்தில் update ஆகும். அந்த ஆதாயத்  தொகைக்கான வரியையும் நாம் தனியாக செலுத்த வேண்டும் அல்லது அதற்கு வரிகள் ஏதேனும் பிடிக்கப்பட்டிருந்தால்
E-filing செய்யும்போது கணக்கு காட்டி அதிகமாக பிடித்தம் செய்திருப்பின் அந்த தொகையை திரும்ப பெறுதல் (refund),
குறைவாக பிடித்தம் செய்திருப்பின் மீதி வரியை செலுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


💠வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31
கடைசி நேர இணையதள பிரச்சனைகளில் சிக்கி தவிப்பதற்கு பதிலாக இப்போதே செய்து விடுவது நல்லது.

🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி: fb Mkumaran Madurai
BEO, KOTTAAMPATTI, MADURAI

Monday, June 11, 2018

அரசு பள்ளியில் தன் பிள்ளையை சேர்த்து அசரவைத்த, கடமையை செய்த அரசு பள்ளி ஆசிரியர்

    அரசு பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்களில் அனைவருமே (ஒரு சிலரை - விரல் விட்டு எண்ணிவிடும் எண்ணிக்கையிலானோரைத் தவிர) தமது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் தான் $®π சேர்த்து விடுவார்கள். (அதற்கு பல காரணங்களாம்)
1️⃣6️⃣*️⃣0️⃣6️⃣*️⃣2️⃣0️⃣1️⃣8️⃣



    ஆனால் இங்கு ஒரு ஆசிரியர் எந்த காரணமும் சொல்லாமல் தான் பணியாற்றும் பள்ளியிலேயே - அதாவது அரசுப் பள்ளியிலேயே தன்னுடைய பிள்ளையை சேர்த்து தன் கடமையை செய்துள்ளார்.

    மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஒன்றியம், வலையன் குளத்துப் பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக
பணியாற்றி வருபவர் திரு.சின்னத்தம்பி அவர்கள். இவர் இந்த கல்வியாண்டில் வேறு பள்ளியில் படித்து வந்த தன் $®π இரண்டு பிள்ளைகளையும்
அரசு பள்ளியில் சேர்த்து, அதுவும் ஒரு பிள்ளையான முத்துவேலை தான் பணியாற்றும் தொடக்கப் பள்ளியில் 4 ஆம் வகுப்பிலும் தன் மற்றுமோர் பிள்ளையான ராஜவேலை மதுரை சொக்கம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியிலும் சேர்த்து அரசு பள்ளிகளுக்கு பெருமை சேர்த்துள்ளார்.



    இது போல அரசு ஆசிரியர்கள் மட்டும் அல்லாமல் அரசுத் துறையைச் சார்ந்த அனைவரும் தமது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து கல்வி கற்க வைத்தால் அரசுப் பள்ளிகளின் மேல் அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படுவதோடு அரசு பள்ளிகளில் மாணாக்கர் எண்ணிக்கை அதிகரிக்கும். அது மட்டும் இல்லாமல் அரசாங்கமும் பள்ளிகளை இன்னும் மேம்படுத்த வழி வகைகளைக் காண $®π நடவடிக்கை மேற்கொள்ளும் .

    மேலும்அரசுப் பள்ளிகளை மூடும் அவல நிலை ஏற்படாமல் $®π ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.
எனவே வருங்கால ஆசிரியர்கள் நலம் காக்க, அரசுப் பள்ளிகளை காப்போம். அதன் மூலம் வருங்கால இளம் $®π தலைமுறைகளுக்கு தரமான இலவசக் கல்வியினை உறுதிப்படுத்துவோம்.

Tuesday, April 24, 2018

மனமொத்த மாறுதல் வேண்டுமா? இதோ உங்களுக்கான வழிகள்...!

*Mutual Transfer*
மனமொத்த மாறுதல்  பெற விரும்புவோர் கீழ்க்காணும் வழிகளில் முயற்சி செய்யலாம்.s


வழி1:

கீழ்க்காணும் சுட்டியை பயன்படுத்துங்கள்.r


வழி2:

 Google play store இல் உள்ள ஆப்பை பயன்படுத்துங்கள். App டவுன்லோட் செய்ய..m



வழி3:
ஃபேஸ்புக்கில் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.
SanRaa
இணைய...

வழி 4:
கீழ்க்காணும் இணைப்பில் சென்று

Mutual Transfer என்னும் தலைப்பில்

பார்க்கவும்.




Friday, April 6, 2018

ஒரே பக்கத்தில் ஆண்டு ஊதிய உயர்வு, வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி விவரம்

ஒரே பக்கத்தில் ஆண்டு ஊதிய உயர்வு, வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி விவரப்பட்டியல்..
டவுன்லோட் செய்து வைத்தால், உதவியாக இருக்கும்...!
இங்கே கிளிக் செய்யுங்கள்...

Sunday, March 11, 2018

ஏர்செல் போர்ட் கோட் கிடைக்க எளிய வழி

அன்பிற்கினிய ஏர்செல் உபயோகிப்பாளர்களே....!



  ஏர்செல் நிறுவனம் நிதிச்சுமை காரணமாக தன்னுடைய சேவையை நிறுத்தியுள்ளது. தற்போது அதற்கான போர்ட் கோட் வாங்க முடியாத வகையில் டவர் சிக்னல்கள் கிடைப்பதில் பிரச்சனை வந்துவிட்டது.

ஐயோ.. அப்படியானால் என்னுடைய மொபைல் எண்ணை மாற்றாமல் வேறு நிறுவனத்திற்கு மாற முடியாமல் போய் விடுமோ என்று அச்சப்பட தேவையில்லை.

கீழ்க்காணும் லின்க்கில் சென்று போர்ட் கோட் வாங்கலாம்.

படி 1: இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
https://ekyc.aircel.com:444/ekyc/genUPC.html


படி 2: CUSTOMER MOBILE NUMBER என்னும் இடத்தில் உங்கள் ஏர்செல் எண்ணை பதிவு செய்யவும்.

படி 3: சிம் கார்டு மேல் உள்ள 19 அல்லது 20 இலக்க எண்களில் கடைசி 5 இலக்கங்களை SIM NUMBER என்னும் இடத்தில் பதிவு செய்யவும்.


படி 4: இப்போது GENERATE UPC என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது உங்களுக்கு UPC கிடைத்து விடும்.

நீங்கள் மாற விரும்பும் நிறுவனத்தில் இந்த கோட் கொடுத்து உங்கள் ஏர்செல் எண்ணை வேறு நிறுவன நெட்வொர்க்குக்கு  மாற்றிகொள்ளுங்கள்..!

தகவலை பகிருங்கள்.. மற்ற ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கும் உதவுங்கள்...!

Saturday, March 10, 2018

Remote control (தொலைவியக்கி) வேலை செய்கிறதா? இல்லையா? கண்டுபிடிக்க எளிய வழி

நமது வீடுகளில் தொலைக்காட்சி, டிவிடி ப்ளேயர் போன்ற இன்னும் பிற சாதனங்களில் தொலைவியக்கி - REMOTE பயன்படுத்துகிறோம். இது சில சமயங்களில் வேலை செய்கிறதா? இல்லையா? என்பது தெரிவதில்லை.

தொலைவியக்கி மூலம் கருவிகளை இயக்கும் பொழுது அந்த செயல் நடைபெறவில்லை என்றால் இரண்டு காரணங்கள் இருக்கலாம்.



1. கருவியில் உள்ள தொலைவியக்கியின் சமிக்ஞை (signals)களை பெறக்கூடிய unit இல் சிக்கல்...

அல்லது

2. தொலைவியக்கியில் சிக்கல்.( அதாவது தொலைவியக்கி சரியாக வேலை செய்யாமல் இருப்பது/ அல்லது தொலைவியக்கியின் பேட்டரியில் போதிய மின்சாரம்- சார்ஜ் இல்லாமல் இருப்பது)

கருவியில் உள்ள unit இல் பிரச்சனை என்றால் அதை சேவை மையத்தில் - service centre இல் கொடுத்து சரி செய்யலாம். Remote இல் பிரச்சனை என்றால், முக்கியமாக பேட்டரி சார்ஜ் இல்லை என்றால் அதை நாமே சரி செய்து விடலாம்.

ஆனால் முதலில் ரிமோட்டில் தான் பிரச்சனை என்பதை எப்படி நாமே கண்டு பிடிப்பது?

கடைகளில் புதிய remote வாங்கும் பொழுது அதை check செய்ய ரிமோட்டில் பேட்டரி போட்டு ஒரு கருவிக்கு நேராக காண்பித்தது ஒவ்வொரு பொத்தானாக -button ஆக அழுத்தும் போது அந்த கருவி "பீப்" ஒலி எழுப்பும். அதன் மூலம் அந்த ரிமோட் மற்றும் அதிலுள்ள பொத்தான்கள் நன்றாக வேலை செய்கிறது என்பதை அறியலாம். வீட்டில் எப்படி சோதனை செய்வது?

மிகவும் எளிது. அதற்காக நீங்கள் அந்த பீப் ஒலி எழுப்பும் கருவியை எல்லாம் வாங்கத் தேவை இல்லை. பின்வரும் வழிகளை பின்பற்றுங்கள்.

தேவையானது கேமரா வசதி உள்ள ஏதாவது ஒரு மொபைல் போன். அவ்வளவு தான்..!

படி1: முதலில் உங்கள் மொபைலில் கேமராவை on செய்து கொள்ளுங்கள்...

படி2: பின்னர் உங்கள் ரிமோட்டில் உள்ள சிக்னல் அனுப்பும் LED யை கேமராவில் காண்பியுங்கள்.

படி3: இப்போது ரிமோட்டில் உள்ள ஒவ்வொரு பட்டன் ஆக அழுத்துங்கள்.

படி4: நீங்கள் அழுத்தும் ஒவ்வொரு பட்டன்க்கும் மொபைலில் உள்ள கேமரா மூலம் பார்க்கும் பொழுது ஒரு voilet நிற ஒளி தெரியும். அப்படி தெரிந்தால் ரிமோட் நன்றாக வேலை செய்கிறது என்று பொருள்.

படி5: சில பொத்தானை அழுத்தும்போது ஒளி வரவில்லை என்றால் அந்த பொத்தான் மட்டும் வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.

படி6: எந்த பட்டன்னும் அழுத்தும் பொழுது ஒளி வரவில்லை என்றால் பேட்டரியை மாற்றி பார்க்கலாம். அப்படியும் ஒளி வரவில்லை என்றால் ரிமோட் அவுட் என்று அர்த்தம். வேறு ரிமோட் வாங்க வேண்டும்.

பி.கு.: ரிமோட்டின் LED இல் இருந்து வரும் ஒளியை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. மொபைல் கேமரா மூலமே பார்க்க முடியும்.

இந்த பதிவு பிடித்தால் பகிருங்கள்...

Thursday, March 8, 2018

தமிழில் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்

அன்பின் தமிழக பள்ளி ஆசிரியர்களே...!

தூய தமிழில் நமது பள்ளி மாணாக்கரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி வழிபாட்டுக் கூட்டத்தில் வாழ்த்தி இசைக்க அருமையான

பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்..! mp3 வடிவில்...

தரவிறக்க - டவுன்லோட் செய்ய ... 
சொடுக்கவும்..
⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇
தமிழ் பிறந்தநாள் வாழ்த்துப்பாடல்.mp3

நன்றி : படைப்பாளர்கள்.

கொடிப்பாடல் எம்பி3

பள்ளி மாணாக்கர்  பாடுவதற்கு ஏற்ற வகையில் எடிட் செய்யப்பட்ட கொடிப்பாடல் ....

mp3 வடிவில் ...

தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்யவும்...
⥥⥥⥥⥥⥥⥥⥥⥥⥥⥥⥥⥥⥥⥥⥥⥥⥥⥥
கொடிப்பாடல்.mp3

நன்றி : படைப்பாளர்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்து எம்பி3 பாடல்


அன்பின் ஆசிரிய பெருமக்களே...!

பள்ளிகளில் காலை வழிபாட்டு கூட்டங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் இசைக்க MP3 வடிவிலான தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்...

தரவிறக்கம் (DOWNLOAD) செய்ய பின்வரும் இணைப்பை சொடுக்கவும்...
       ⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩
தமிழ்த்தாய் வாழ்த்து.mp3

நன்றி : படைப்பாளர்கள்.